What else can be as beautiful as sending a thoughtful wedding anniversary wish to a couple on their special day? Choose the best anniversary wish from our anniversary wishes collection. Scroll down for beautiful anniversary wishes in Tamil.
இருமணம் இணைந்து திருமண பந்தத்தில் நடைபோடும் தம்பதியினருக்கு, அவர்களின் திருமண நாளில், உங்கள் ஆசிகளை வாழ்த்து செய்தியாக அனுப்ப, உங்களுக்காக அழகிய திருமணநாள் வாழ்த்துகளை தமிழில் தொகுத்துள்ளோம். உங்கள் மனம் கவர்ந்த வாழ்த்து செய்தியை தேர்வு செய்து, உங்கள் மனம் கவர்ந்த தம்பதியினருக்கு அனுப்புங்கள்!
அழகான, இதமான உம் உறவுப் பாலத்தை
அன்பு, ஆரோக்கியம்,
செல்வம், வளம் ஆகிய தூண்கள்
நிலைத்து நின்று பலப்படுத்த,
உம் பயணம் நீண்டு நிலைத்திட
எம் மனமார்ந்த வாழ்த்துகள்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
Marriage Wishes in Tamil
உல்லாச வானில் சிறகு விரித்த சிட்டுக் குருவிகளாய்
இருவரும் ஆனந்தமாய் வட்டமிட்டுச் சுற்றிவர வாழ்த்துகள்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
வண்ண மலர்களின் சுகந்தங்கள் கமழும் நந்தவனமாய்
உம் வாழ்க்கை பூத்துக் குலுங்கட்டும்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
இந்நன்னாளில் சகல ஐஸ்வர்யங்களும்,
வானம் விரித்த மலைச் சாரலாய்
பொழிந்து உங்களுக்கு ஆசி வழங்கட்டும்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
Wedding Day Wishes in Tamil
நிலத்தின் பொறுமையும்,
நீரின் இனிமையும்,
காற்றின் குளுமையும்,
நெருப்பின் தூய்மையும்,
ஆகாயத்தின் விசாலமும் பெற்று
சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகள்.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
மலரும் மணமும் போல்
குழலும் இசையும் போல்
நிலவும் குளுமையும் போல்
தமிழும் இனிமையும் போல்
இருவரும் ஒன்றிக் கலந்து, சேர்ந்து வாழ வாழ்த்துகள்.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
Tamil Wedding Quotes
மணக்கும் மல்லிகையாய்
மயக்கும் மரிக்கொழுந்தாய்
செழிக்கும் செண்பகமாய்
அனைத்து வளங்களும் இணைந்து
உங்கள் குடும்ப கதம்பம் மணம் கமழ வாழ்த்துகள்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
வாழ்க்கை ஊஞ்சலை அசைக்கும் தென்றலாய் நீயும்,
தாங்கும் கயிறாய் அவரும்,
நீடூடி பல்லாண்டு வாழ வாழ்த்துகள்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
Marriage Kavithai in Tamil
இரவின் இருளில் மலை மேல் ஒளிரும் தீபம் போல்
இன்னல்கள், இடர்பாடுகள் தாண்டி ஒளிந்து வளரட்டும் உம் வாழ்வு!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
அழகிய செவ்வானத்தில்
புதிதாய் தோன்றிய வானவில் போல்
வண்ணமயமாகட்டும் உங்கள் வாழ்க்கை!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
Wedding Anniversary Wishes for Husband & Wife
தாளமின்றி இசை இல்லை
என் தாளமாக நீ இருப்பதனாலேயே,
இசையாய் நான் ஒலிக்கிறேன்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
நேற்று நடந்தது போல் இருக்கிறது
நீ என் கரம் பற்றிய அந்நாள்;
நாட்கள் நகர நகர
கோர்த்த கரங்களின் நெருக்கம் கூடித்தான் போகிறது.
வருடங்கள் கடக்கட்டும்;
வயது தேயட்டும்;
இருந்தும் அழகாய் ஆழமாகிறது நம் உறவு.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
Happy Wedding Anniversary Wishes in Tamil
யாரோவாய் இருந்து
இன்று நானே ஆகிபோனாயடா!
என் பெயரில் நுழைந்து,
உயிரில் நுழைந்த
என்னுள் பாதிக்கு
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
தூரிகை தெரிக்கும் வண்ணங்களாய்
ஜொலிக்கிறது என் வாழ்க்கை-
என் ஓவியன் நீயானதால்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
நானும் தாயானேன்!
இதயத்தில் கருவுற்று இருக்கிறேன் நான்;
என் இதய கருவறையில் நீ!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
வாழ்க்கை ஒரு மலையேற்றம்.
இதில் என் இரு கால்கள் போதாதென்று
ஊன்று கோளாய் உன்னை தந்தான் இறைவன்.
ஒவ்வொரு அடியிலும் என்னை தாங்கி நிற்கும் துணையே,
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
Beautiful Wedding Anniversary Wishes in Tamil
வாழ்க்கை பயணத்தின் சக பயணியாய் வந்தாய்,
உன்னோடு பயணிக்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதும்
கண் குளிரும் காட்சிகளே ஏராளம், ஜன்னல் ஓரம்.
பயணத்தை செலுத்த நீ இருக்கையில்
எங்கே வரும் அலுப்பும், சலிப்பும்?
இன்னும் நூறாண்டுக் காலம் பயணிக்கவும் ஆவல் – உன்னுடன்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.”
ஆனந்த லயத்தில் இருந்த போது இறைவன்,
உன்னை எனக்கென எழுதி வைத்தான்.
என் வாழ்வில் ஆனந்தத்தை பிரசவிக்கும் வரமாய்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
ராகம் நீ; தாளம் நான்;
ஸ்ருதி நீ; லயம் நான்;
ஸ்வரம் நீ; மொழி நான்;
என்றென்றும் ஓங்கி ஒலிக்கட்டும் நம் சங்கீதம்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
சின்னஞ் சிறிதாய் இருந்த என் இதய தெப்பத்தில்
பெரும் அருவியாய் பாய்ந்து,
வற்றாத ஜீவ நதியாய் ஆக்கிவிட்டாய் என் இதயத்தை.
நதிமூலமும் நீயே; கடல் சங்கமும் நீயே!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
Hope you love the anniversary wishes in tamil. Please share this wishes with your loved one on wedding days and enjoy your occassion. Don’t forget to comment your favorite tamil wishes in below comment box.
Lovely.
Thanks Mam.
அற்புதம்.. ஒவ்வொரு வாழ்த்தும் அருமை…
மிக்க நன்றி
கவிதை வரிகள் அனைத்தும் மிகவும் அருமை
மிக்க நன்றி
Excellent words,, so touching .awesome writing.
Thank you. Your feedback is important to us.
Very nice wishes
Thanks a lot for your comment
Every poetic lines describe the soulful connection between husband and wife in their life journey.. All the wishes are were weaved with details attached to eartly nature which brings out the fragrance of love for their life partner ..blissful messages…?
Thanks a lot for your comment. This encorage us to create more post like this.
Fabulous. Well said.?