மனையடி சாஸ்திரம் 2024 | Manaiyadi Sastram in Tamil

Looking for manaiyadi sastram in tamil then you landed in a right place. We have listed out complete vastu manaiyadi sastram 2023 in tamil for your reference. Use the table and construct your home with perfect vastu.

மனையடி சாஸ்திரத்தின் பெருமை

மனையடி சாஸ்திரம் என்பது ஜோதிட சாஸ்திரத்தைப் போலேவே ஓர் அரிய கலையாகும். அதில் பல பிரமிப்பூட்டும் உண்மைகள் அடங்கியிருந்தன.

பெண்ணுக்கும் பையனுக்கும் நல்ல பொருத்தம் இருந்தால் தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பொருத்தம் இல்லையென்றால் பெரும்பாலும் அத்திருமணம் நிச்சயிக்கப்படுவதில்லை.

You May Also Like:Vastu Dates in 2024

ஆனால் வீடுகட்ட நினைப்பவர்கள் அவ்வாறு மனையடி சாஸ்த்திரத்தை நாடுவதில்லை அவர்கள் எஞ்சீனியரையோ அல்லது அனுபவம் மிகுந்த மேஸ்திரி- யையோ நாடிச்செல்வார்கள். வீட்டைக் கட்டுவதைப் பற்றி அவரிடம் தீவிரமாக ஆலோசனை புரிவார்கள்.

மனையடி சாஸ்திரம் அளவுகள் | Tamil Manaiyadi Sastram

மனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும்.

அளவுகள் பலன்கள்
6அடி நன்மை
7அடி தரித்திரம்
8அடி நல்ல பாக்கியம் தரும்
9அடி கெடுதல் தரும்
10அடி ஆடுமாடு சுபிட்சம்
11அடி பால்பாக்கியம்
12அடி விரோதம், செல்வம் குறையும்
13அடி ஆரோக்கியம் குறைவு
14அடி சஞ்சலம், மனக்கவலை நஷ்டம்
15அடி காரியபங்கம், பாக்கியம் சேராது
16அடி மிகுந்த செல்வமுண்டு
17அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும்
18அடி அமர்ந்த மனை பாழாம்
19அடி மனைவி, புத்திரர், கவலைதரும்
20அடி ராஜயோகம்
21அடி பசுக்களுடன் பால் பாக்கியம் தரும்
22அடி எதிரி அஞ்சுவான். மகிழ்ச்சி
23அடி வியாதிகளுடன் கலங்கி நிற்பான்
24அடி வயது குன்றும், மத்திம பலன்
25அடி தெய்வ கடாக்ஷமில்லை
26அடி இந்திரனைப் போல் வாழ்வார்
27அடி மிக்க செல்வ சம்பத்துடன் வாழ்வார்
28அடி செல்வம் சேரும்
29அடி பால்பாக்கியம், செல்வம் தரும்
30அடி லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று வாழ்வார்
31அடி சிவகடாக்ஷத்துடன் நன்மைபெருகும்
32அடி முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வார்
33அடி நன்மை, 34- அடி விட்டோட்டும்
35அடி தெய்வகடாக்ஷமுண்டு
36அடி அரசரோடு அரசாள்வார்
37அடி இன்பமும் லாபமும் தரும்
38அடி பேய் பிசாசு குடியிருக்கும்
39அடி இன்பம் சுகம் தரும்
40அடி என்றும் சலிப்புண்டாகும்
41அடி இன்பமும் செல்வமும் ஓங்கும்
42அடி லக்ஷ்மி குடியிருப்பாள்
43அடி சிறப்பில்லை, தீங்கு ஏற்படும்.
44அடி கண் போகும்
45அடி துர்புத்திரர் உண்டு
46அடி வீடு ஓட்டும்
47அடி எந்நாளும் வறுமை தரும்
48அடி வீடு தீப்படும்
49அடி மூதேவி வாசம்
50அடி பால்பாக்கியம் ஏற்படும்
51அடி வியாஜ்யம்
52அடி தான்யமுண்டு
53அடி வீண்செலவு
54அடி லாபம் தரும்
55அடி உறவினர் விரோதம்
56அடி புத்திரர் உற்பத்தி
57அடி புத்திர அற்பம்
58அடி விரோதம்
59அடி சுபதரிசனம்
60அடி பொருள் விருத்தி உண்டு
61அடி விரோதமுண்டு
62அடி வறுமை தரும்
63அடி இருப்பு குலையும்
64அடி நல்ல சம்பத்து தரும்
65அடி பெண் நாசம்
66அடி புத்திரபாக்கியம்
67அடி பயம்
68அடி திரவிய லாபம்
69அடி அக்னி உபாதை
70அடி அன்னியருக்கு பலன் தரும்
71அடி இராசியுப்பிரியம்
72அடி வெகுபாக்கியம்
73அடி குதிரை கட்டி வாழ்வான்
74அடி பிரபல விருத்தி
75அடி சுகம்
76அடி புத்திர அற்பம்
77அடி யானை கட்டி வாழ்வான்
78அடி புத்திர அற்பம்
79அடி கன்று காலி விருத்தி
80அடி லக்ஷ்மிவாசம்
81அடி இடி விழும்
82அடி தோஷம் செய்யும்
83அடி மரண பயம்
84அடி சௌக்கிய பலன்
85அடி சீமானாவான்
86அடி இம்சை உண்டு
87அடி தண்டிகை உண்டு.
88அடி சௌக்கியம்
89அடி பலவீடுகள் கட்டுவான்90அடி யோகம், பாக்கியம் தரும்
91அடி வித்துவாம்சமுண்டு
92அடி ஐஸ்வரியம்
93அடி தேசாந்திரம் வாழ்வான்
94அடி அன்னிய தேசம் போவான்
95அடி தனவந்தன்
96அடி பிறதேசம் செல்வான்
97அடி கப்பல் வியாபாரம் விலை மதிப்புள்ள வியாபாரம் போவான
98அடி பிறதேசங்கள் போவான்
99அடி இராஜ்ஜியம் ஆள்வான்
100அடி க்ஷமத்துடன் சுகத்துடன், வாழ்வான்.

வீடு, நிலம் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்

 • வீடுகள். கடைகள். தொழிற்சாலைகள், காம்ப்ளக்ஸ்கள், அபார்ட்மென்ட்கள், கல்யாண மண்டபங்கள், இதர பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்காக நாம் வாங்கப்போகும் நிலம் முதல் தரமான மனையா, இரண்டாம் தரமான மனையா, மூன்றாம் தரமான மனையா, நான்காம் தரமான மனையா என்பதை அறிந்து முதல் தரமான மனையை மட்டுமே வாங்க வேண்டும்.
 • வாங்கும் இடத்தின் சுற்றுப்புறஃசுற்றுசூழல் அமைப்பு அறிந்து வாங்க வேண்டும்.
 • நிலம் சதுரமா? நீண்ட சதுரமா? கோணலாக உள்ளதா? என்பதை மிக முக்கியமாகப் பார்க்கவேண்டும்.
 • வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் போது தேவைப்படும் இடங்களில் இடைவெளி கொடுக்க இடம் உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும்.
 • நமது இடத்தை ஒட்டி விலைக்கு ஒரு இடம் வந்தால் வாங்கலாமா? வாங்குவதால் நம் வீட்டு வாசல்கள் நீச்சம் ஆகிவிடுமா? என்பதை பார்க்க வேண்டும்.
 • நம், வீட்டுக்கு ஒட்டிய அடுத்த நிலத்தை வாங்கினால் நமக்கு நன்மையா? கெடுதலா? என்பதை பார்க்க வேண்டும்.
 • நம் இடத்திலிருந்து ஒரு பகுதியை விற்கும் போது எந்த பகுதியை விற்றால் நன்மை, எந்த பகுதியை விற்றால் பாதிப்படைவோம்? என்பதை பார்க்க வேண்டும்.
 • நிலத்திற்குத் தெரு தாக்கம் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.
 • வீடு அருகில் வாஸ்து-க்கு வக்கிரமான அதே சமயம் அகற்றமுடியாத மேடுகள், பள்ளங்கள் உள்ளதா? இருந்தால் வாங்கலாமா? கவனிக்க வேண்டும்.
 • நம் வீட்டு அருகில் ஓடை. ஆறு உள்ளதா? இருந்தால் வாங்கலாமா? என்பதை கவனிக்க வேண்டும்.
 • நம் நிலத்துடன் தெரு முடிவடைந்தால் அந்த இடத்தை வாங்கலாமா? என்பதை பார்க்க வேண்டும்.

இவ்வாறு பல கோணங்களில் அறிந்து ஆராய்ந்து ஓர் இடத்தை வாங்க விற்க முடிவு செய்ய வேண்டும்.

Tamil Blog

error: Content is protected !!